தூத்துக்குடி, மே 15: தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை மகன் வேல்முருகன் (23). டிப்பர் லாரி டிரைவரான இவர், நேற்று தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் உள்ள குடோனில் புண்ணாக்கு மூட்டைகளை இறக்கி விட்டு புதிய துறைமுகம் -மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரி எதிர்பாராதவிதமாக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் யாதவ் (35) என்பவர் மீது மோதியது. மேலும் அவர் மீது மோதிய வேகத்தில் லாரி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த முகேஷ் யாதவ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
0