சென்னை: லாரியில் உறங்கிக் கொண்டிருந்த லாரி ஓட்டுநரின் செல்போனை திருடிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப், வ/57, த/பெ.திவ்யநாதன் என்பவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். பிரதீப் வேலை விஷயமாக லாரியுடன் சென்னைக்கு வந்து, நேற்று (02.03.2023) இரவு, மாதவரம், C.M.D.A.லாரி நிறுத்துமிடத்தில் லாரியை நிறுத்திவிட்டு லாரியில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று (03.03.2023) அதிகாலை சுமார் 03.30 மணியளவில், பிரதீப் திடீரென சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, 2 நபர்கள் லாரியில் வைத்திருந்த பிரதீப்பின் செல்போனை எடுத்துக் கொண்டு அவர்களது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். உடனே, பிரதீப் M-1 மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. M-1 மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி செல்போன் திருட்டு சம்பவத்தில் 1.முகமது இசாக், வ/25, த/பெ.முகமது நாசிர், ஜோசப் முதல் தெரு, கன்னிகாபுரம், புளியந்தோப்பு, சென்னை, 2சரண்ராஜ், வ/20, த/பெ.ஜேம்ஸ் கண்ணன், தாஸ் நகர் 5வது தெரு, கன்னிகாபுரம், புளியந்தோப்பு ஆகிய இருவரை இன்று (03.03.2023)கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் செல்போன் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில், எதிரி முகமது இசாக் மீது ஏற்கனவே P-3 வியாசர்பாடி, பெரம்பூர் இரயில் நிலையம் மற்றும் சோழவரம் ஆகிய காவல் நிலையங்களில் 3 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர், இன்று (03.03.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். …