தூத்துக்குடி, ஜூன் 2: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கடவம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சரவணன்(47), லாரி டிரைவரான இவர் மே 22ம்தேதி தூத்துக்குடி யில் உள்ள புக்கிங் ஆபீசில் தனது லாரியை நிறுத்தியிருந்தார். பின்னர் அவர் லாரியில் ஏற முயன்றபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சரவணன் மனைவி வீரம்மாள் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சிப்காட் இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
லாரியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் சாவு
101
previous post