செய்முறை : மட்டன் துண்டுகளை தனியாக மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். கலங்கள், லெமன் கிராஸ், இஞ்சி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் பேஸ்ட் அனைத்தையும் மிக்சியில் மைய பேஸ்ட் போல் அரைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் அரைத்த விழுதை நன்கு வதக்கவும். இதில் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்கு கொதித்து வரும் போது தேங்காய்ப் பால் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவேண்டும். தேங்காய் பால் வற்றும் வரை மட்டனை நன்கு வேகவைக்கவும். பிறகு சூடாக பரிமாறவும்.