ஈரோடு, ஜூன் 25: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், கருங்கல்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் மேற்கொண்ட சோதனையில், சின்ன மாரியம்மன் கோயில் பகுதியில் வெளி மாநில லாட்டரி விற்ற செந்தில்குமார் (47), திருநகர் காலனி ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் லாட்டரி விற்ற கைக்கோளன் தோட்டம், முத்துவேலப்ப வீதியை சேர்ந்த சுரேஷ் (45) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, லாட்டரி எண்கள் எழுத்தப்பட்ட தாள்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.