ஈரோடு,ஜூன்24: ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் நேற்று முன் தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நெரிகல்மேடு பஸ் நிறுத்தம் அருகிலும், கருங்கல்பாளையம், காவிரி ரோடு, ஓம்காளியம்மன் கோயில் அருகிலும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த சிதம்பரனார் வீதியை சேர்ந்த வேல்முருகன் (39), பெரியமாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த ஜீவானந்தம் (34) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி எண்கள் எழுதப்பட்டிருந்த தாள்கள், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.