ஈரோடு, அக். 8: ஈரோடு மாவட்டம் பவானி மைலம்பாடி ஆலமரம் பஸ் ஸ்டாப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில், பவானி போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்த மைலம்பாடி கல்வநாயக்கனூரை சேர்ந்த தவசியப்பன் (43), குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சரவணன் (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 12 லாட்டரி சீட்டு மற்றும் 2 ஸ்மார்ட் போன், ரூ.6,600 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.