வேலூர், ஏப்.5: வேலூர் அருகே லாட்ஜில் பாலியல் தொழில் நடத்திய திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மேலாளரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து லாட்ஜை வாடகைக்கு எடுத்தவரை தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த அரியூர் பகுதியில் உள்ள லாட்ஜ்களில் பாலியல் தொழில் நடப்பதாக அரியூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்குள்ள லாட்ஜ்களில் சோதனையிட்டனர். அப்போது ஒரு லாட்ஜில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து லாட்ஜ் மேலாளரான திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்கானூர் பகுதியை சேர்ந்த சபாபதி(34) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து லாட்ஜை வாடகைக்கு எடுத்த அத்தியூரை சேர்ந்த நாராயணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து லாட்ஜ்களில் தீவிர சோதனை நடத்தப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.