நன்றி குங்குமம் டாக்டர்சிகிச்சைஇன்றைய மருத்துவ உலகில் ரோபோக்களை பயன்படுத்தி சிகிச்சைகள் மேற்கொள்வது ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது. தற்போது மூட்டு மாற்று அறுவைசிகிச்சையிலும் ரோபோட்டிக் செய்யப்படுவதை மிகப்பெரிய முன்னேற்றமாக மருத்துவர்கள் கருதுகிறார்கள். ரோபோட்டிக் அறுவை சிகிச்சை என்பது என்ன? எலும்பு மருத்துவத்தில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை என்ன பலனைத் தரும்?!எலும்பு சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜய்போஸ் விளக்குகிறார்…‘‘நோயாளியின் உடலினுள் ரோபோவின் கைகளைப் பொறுத்தி, அதன் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் மருத்துவர் அறுவை சிகிச்சைசெய்வதையே ரோபோட்டிக் சர்ஜரி(Robotic Surgery) என்கிறோம். தமிழ்நாட்டிலும் இந்த சிகிச்சை தற்போது செய்யப்பட்டு வருகிறது. வழக்கமான மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் கிடைக்கும் பலன்களைக் காட்டிலும் இதில் நோயாளிக்கும், மருத்துவருக்கும் கிடைக்கும் பலன்கள் அதிகம். உடல் அளவீடு மற்றும் எண்கள் என துல்லியமாக ஒரு பணியைச் செய்ய முயலும்போது, இயந்திரங்கள் மனிதர்களைவிட சிறப்பாக செயல்படுகின்றன. இயந்திரத்தின் மூலம் கிடைக்கும் துல்லியமான சிகிச்சையை மனிதர்களை வைத்து செய்ய முடியாது. முக்கியமாக அதைக் கையாள்வதற்கு தேர்ச்சியான மருத்துவரும் தேவை. ரோபோட்டிக் சிகிச்சை துல்லியமானது என்பதற்காக எல்லா மருத்துவர்களும் அதை செய்துவிட முடியாது. எனவே, தரமான ஒரு ரோபோ அமைப்புடன், பயிற்சி பெற்ற மருத்துவரும் சேரும்போதுதான் சிறந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடியும். சாதாரண செயல்பாட்டின் முறை மற்றும் மறுசீரமைத்தல் சிறப்பு அறுவைச் சிகிச்சையின் காரணமாக, விரைவாக நோயாளி தன் இயல்புக்குத் திரும்பிவிட முடியும். அதேபோல ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ரத்த இழப்பும் பெரிதும் தவிர்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தளவு நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்களால் ஒருவருக்கு 50 வயதுக்கு முன்பே மூட்டுத் தேய்மானம் அடையக் கூடிய சூழல் உருவாகிறது. அதுபோல மூட்டு மாற்று அறுவைசிகிச்சையும் முன்பை விட அதிகரித்துள்ளது. அதனால் இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை எளிமைப்படுத்துவதற்காக ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை காலத்தின் கட்டாயமாக உள்ளது.சாதாரண சர்ஜரி முறையில் சரியான படி அறுவை சிகிச்சை நடந்தாலும் சில தவறுகளைத் தவிர்க்க முடியாது. ஆனால், ரோபோட்டிக் சர்ஜரி மூலம் அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்ன நிகழும் என்பதை கணினி மூலம் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப ரோபோட்டிக் உதவியுடன் இந்த அறுவை சிகிச்சை செய்ய முடியும். சில அறுவை சிகிச்சை முடிவுகளை முன்கூட்டியே தீர்மானிக்க முடியும். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவருடைய கால் எவ்வாறு இயங்கும் என்பதையும் கூட கணினி முன் கூட்டியே காட்டிவிடும். இதன் மூலம் துல்லியமான நுட்பமான முறையில் ஒருவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடியும். அதேபோல அறுவைசிகிச்சையினை ஒரு மணி நேரத்திற்குள் செய்துவிட முடியும். கட்டணமும் வேறுபடாது. சாதாரண அறுவைசிகிச்சைக்கு உரிய செலவே இதற்கும் ஆகும். மூட்டு மாற்று அறுவைசிகிச்சையை ரோபோட்டிக் முறையில் செய்த பிறகு அவர்களுக்கு வலி தொந்தரவுகள் குறைந்த அளவிலேயே உள்ளது எனவும் சீக்கிரத்தில் எழுந்து நடக்க முடிகிறது எனவும் நோயாளிகள் கூறுகிறார்கள். இது மகிழ்ச்சிக்குரிய ஒரு முன்னேற்றம்.’’– க.இளஞ்சேரன்
ரோபோ டாக்டர்
86
previous post