கோவை, மே 19: கோவை செட்டிபாளையம் ரோடு ஈச்சனாரி பிரிவு அருகே நேற்று முன்தினம் பைக்குகள் மோதி விபத்து ஏற்பட்டது. இது குறித்த புகாரின்பேரில், போத்தனூர் போலீசார் ரோந்து வாகனத்தில் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது விபத்து குறித்து விசாரிக்கையில், அங்கு குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் கான்ஸ்டபிள் நீலமேகம் என்பவருடன் தகராறு செய்தார். தொடர்ந்து அந்த வாலிபர் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை அடித்து உடைத்து ரகளை செய்தார். இதையடுத்து அந்த வாலிபர் போலீசாரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து போத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணையில், போலீஸ் வாகன கண்ணாடியை உடைத்து ரகளை செய்தது, செட்டிபாளையம் ஸ்ரீராம் நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (27) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரோந்து வாகன கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
0
previous post