வேளச்சேரி, டிச.10: தரமணியில் குடிபோதையில் காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். தரமணி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் கண்ணன் (38). இவர் நேற்று முன்தினம் தரமணி ரயில் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ரயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்ததில் மதுபோதையில் நின்று கொண்டிருந்த வாலிபரை அங்கிருந்து செல்லும்படி கூறினார். ஆனால் அந்த நபர், காவலரிடம் வாய்தகராறில் ஈடுபட்டு, காவலரை தாக்கிவிட்டு தப்பினார். இது குறித்து காவலர் தரமணி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார், வாலிபர் யார் எந்தபகுதியை சேர்ந்தவர் என விசாரணை செய்து வருகின்றனர்.
ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் மீது சரமாரி தாக்குதல்
0