பெரம்பூர், ஆக.4: கொடுங்கையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் ஜெய அந்தோணி சுந்தர்ராஜ், கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி இரவு, கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர் 60 அடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையோரம் அமர்ந்து மது அருந்தியவர்களை கலைந்து செல்லும்படி கூறியுள்ளார். அதில், ஒருவர் தலைமை காவலரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த தலைமைக் காவலர், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், மணலி ஜெகநாதன் 1வது தெருவை சேர்ந்த பரத் (27) என்பவர், தலைமை காவலரை தாக்கியது தெரிந்தது. நேற்று முன்தினம் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.