ஓசூர், மே 14: ஓசூர் ஒன்றியம் நல்லூர் மற்றும் எஸ்.முத்துகானப்பள்ளி விவசாயிகளுக்கு, அதியமான் வேளாண்மை கல்லூரி 4ம் ஆண்டு மாணவிகள், ரோஜா செடிகளில் ஏற்படும் பவுடரி மில்ட்யூ நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் தீர்வை குறித்து விளக்கினர். ரோஜா செடிகளில் ஏற்படும் பொதுவான பூஞ்சை நோயான பவுடரி மில்ட்யூ-வை கட்டுப்படுத்த பயோ கட்டுப்பாட்டு வழிமுறையாக மீன் அமிலம், பஞ்சகாவ்யம், புங்கம் புண்ணாக்கு உயிரி உரங்களாக பயன்படுகிறது. டிரைக்கோடெர்மா 3கி கரைசல், பசிலியோமைசஸ் இயர்கை பூச்சி விரட்டிகளாக பயன்படுகிறது. இவை பயனுள்ளதாக உள்ளது. இது ஒரு பயனுள்ள பூஞ்சை (மைகோபாரசைட்) ஆகும். இயற்கை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தீர்வாகும். பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் ரோஜா செடிகளை ஆரோக்கியமாக பராமரிக்க இயற்கை பூச்சி கொல்லி உரம் உதவுகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி உரமானது, விவசாயிகள் பார்வைக்காக மாணவிகள் ரிஃபா, ரூபா, சந்யா, சரண்யா, ரஞ்சனா, ரேணு பிரியா, ரஞ்சிதா, சைலஜா ஆகியோர் கொண்ட குழுவினர் கண்காட்சியில் காட்சிப்படுத்தி விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
ரோஜா செடிகளில் நோயை கட்டுப்படுத்த உரம் கண்காட்சி
0
previous post