நாகர்கோவில், மே 19: நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் நர்சிங் கல்லூரியில் உலக செவிலியர் தின கொண்டாட்டம் கல்லூரி தலைவர் அருள் கண்ணன் தலைமையில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் டாக்டர் லியாகத் அலி மற்றும் நர்சிங் கல்லூரி முதல்வர் சுகிர்தா முன்னிலையில் நடைபெற்றது. கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக மாணவி கிரிஜா வரவேற்றார். பேராசிரியர் செல்லம்மாள் நன்றி கூறினார். மாணவி ஆன்சிலின் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி திட்ட ஆலோசகர் சாந்தி, திட்ட மேலாளர் சில்வெஸ்டர், ஆவண அலுவலர் ஜியோ பிரகாஷ், மேலாளர்கள் கோபி மற்றும் நிதி மேலாளர் சேது, கல்லூரி பேராசிரியர்கள் ஐயப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதி பெருமாள், மரிய ஜாண், சாம்ஜெபா, பரமேஸ்வரி, ஏஞ்சலின் சர்மிளா, அலுவலக செயலர் சுஜின், ஜாண் டிக்சன், ஜெனில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரோஜாவனம் கல்லூரியில் உலக செவிலியர் தினவிழா
70
previous post