அஞ்சுகிராமம்,செப்.1: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், ரோட்டரி கிளப் நாகர்கோவில் டவுண் சார்பாக ரோட்டராக்ட் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணைத் தலைவர் முனைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் முனைவர் பிளஸ்சி ஜியோ, கல்லூரி முதல்வர் முனைவர் ராஜேஷ், துணை முதல்வர் பேராசிரியர் ஜெயக்குமார், ரொட்டேரியன் லாரன்ஸ், ரோட்டரி சங்கத்தின் தலைவர், நாகர்கோவில் டவுண் மற்றும் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் ராஜேஷ் தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜேசிஐ தலைவர் ஸ்டாலின் ரோஸ் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசினார். ரோட்டரி கிளப் நாகர்கோவில் டவுண் சார்பாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.