கோவை, நவ. 21: கோவை மின் பகிர்மான வட்டம் ரேஸ்கோர்ஸ் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு (அண்ணாசிலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு (கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் ரோடு (சுங்கம் முதல் விநாயகர் கோயில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி மற்றும் பிற பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாளை மின்தடை
0
previous post