நாகர்கோவில், ஜூன் 19: ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்செல்வவிளை பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: ரேஷன்கடைகளில் அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை ரேஷன்கார்டு வைத்துள்ள பயனாளிகள் தங்கள் கை ரேகை பதிவு செய்யும் பணியில் உள்ள முன்னேற்றம் தொடர்பாகவும், இ-கேஒய்சி, மின்னணு தராசை விற்பனை முனைய இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு சீரான முறையிலும், சரியான வேகத்திலும் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விபரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறித்தும், கல்வி கற்பிக்கும் முறை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. குழந்தைகளுடன் கலந்துரையாடலும் நடந்தது. மேலும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சேர்க்கையை அதிகப்படுத்திட அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு பணிகள் கலெக்டர் ஆய்வு
0
previous post