திருமங்கலம், ஜூன் 26: திருமங்கலம் கற்பகம் நகரினை அடுத்துள்ள தர்மர்நகரில் வீட்டின் முன்பு ரேஷன் அரிசி மூடைகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதாக வட்ட வழங்கல் துறையினருக்கு தகவல் வந்தது. திருமங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் அய்யம்மாள், தாலுகா சிவில் சப்ளை வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஒரு வீட்டின் முன்பாக 4 மூடை ரேஷன் அரிசி இருந்தது. 140 கிலோ எடையுள்ள இந்த அரிசி மூடைகள் யாருடையது என தெரியவிலலை. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த ரேஷன் அரிசியை விற்பனைக்கு கடத்தி வந்தவர்கள் அச்சமடைந்து அங்கு வைத்துவிட்டு சென்றனரா என, விசாரணை நடத்தி வருகின்றனர்.