திண்டுக்கல், மே 26: ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள லக்கையன்கோட்டை பகுதியை சேர்ந்த ஆனந்த் (எ) ஆனந்தராஜ் (41) என்பவர் சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்தார். திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து 1500 கிலோ ரேஷன் அரிசி, சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆனந்த் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை எஸ்பி செல்வகுமார், மாவட்ட கலெக்டர் சரவணனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை டிஎஸ்பி செந்தில் இளந்திரையன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுகுணா, எஸ்ஐ ராதா மற்றும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் ஆனந்த்தை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.