திருச்செங்கோடு, ஜூலை 7: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், மஞ்சள் ஏலம் டெண்டர் மூலம் நடந்தது. மஞ்சள் மூட்டைகளை ஜேடர்பாளையம் சோழசிராமணி, இறையமங்கலம், கொடுமுடி பாசூர், அந்தியூர், துறையூர் தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூர், செய்யார், தலைவாசல் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தனி வாகனங்களில் கொண்டு வந்தனர்.
இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7605 முதல் ரூ.14,402 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.5607 முதல் ரூ.12,842 வரையிலும், பனங்காளி ரூ.4645 முதல் ரூ.27,699 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 800 மூட்டைகள் ரூ.64.23 லட்சத்திற்கு விற்பனையானது.