நெமிலி, ஜூன் 30:நெமிலி அடுத்த பனப்பாக்கம் பேரூராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, பேரூராட்சி மன்ற கூட்டத்தில், மன்ற தலைவர் கவிதா சீனிவாசன் தலைமையில், உறுப்பினர்கள் முன்னிலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தீர்மானம் வைத்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பேரில், அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பனப்பாக்கம் பேரூராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.6.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்தனர்.
இதையடுத்து கடந்த மாதம் 29ம் தேதி பனப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் நேரில் சென்று
பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும் விரைந்து முடித்து பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் என அதிகாரியிடம் கேட்டுக்கொண்டார். அப்போது, பேரூராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் இருந்தனர்.
கேப்சன் நெமிலி அடுத்த பனப்பாக்கம் பேரூராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலத்தை சமன் செய்யும் பணி நடந்து வருகிறது.