Thursday, May 15, 2025
Home மாவட்டம்திருப்பூர் ரூ.6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ரூ.6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

by Francis

 

அவிநாசி,மே8:அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு பருத்தி வரத்து அதிகரித்தது. இந்த வார ஏலத்திற்கு, மொத்தம் 80..31 எடையுள்ள 289 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். பி.டி.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7500 முதல் ரூ.8339 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரையிலும் ஏலம் போனது. நேற்று பருத்தி ஏல மையத்தில், மொத்தம் ரூ.6 லட்சத்து 11 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், ஆத்தூர்,சத்தியமங்கலம்,கொள்ளேகால்,அந்தியூர்,அத்தாணி,அவிநாசி,குன்னத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 65 பருத்தி விவசாயிகளும்,கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 6 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi