சேந்தமங்கலம், ஜூன் 23: புதுச்சத்திரம் ஒன்றியம் நாட்டாமங்கலம், கல்யாணி, கண்ணூர்பட்டி, தாத்தையங்கார்பட்டி, திருமலைப்பட்டி, கடந்தம்பட்டி, காட்டூர், தொட்டிபட்டி ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.6 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைப்பதற்கு, நேற்று பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார அட்மா குழு தலைவர் கௌதம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதா, முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர். ராமலிங்கம் எம்எல்ஏ கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
விரைவில், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும், ராசிபுரம் கூட்டுக் குடிநீர் தினம்தோறும் விநியோகம் செய்வதற்கான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது என்றார். நிகழ்ச்சியில், வட்டார பொறியாளர் சாந்தி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சாந்தி வெங்கடாஜலம், ராம்குமார், முத்துசாமி, வரதராஜன், கிருஷ்ணன், செந்தில்குமார், சசிகுமார், விக்னேஸ்வரன், குமார் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.