லால்குடி, மே 24: லால்குடி அரசு மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகளை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் துவக்கி வைத்தார்.திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ.8 கோடியில் தாய் சேய் நல பிரிவுக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது. இந்நிலையில் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் வேண்டுமென பொதுமக்கள் கொடுத்த கோரிக்கையின் பேரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பணிகளை நேற்று தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் கலந்து கொண்டு கூடுதல் கட்டிடத்திற்கான பணிகளை துவக்கி வைத்து ஆலோசனைகளை வழங்கினார்.நகர மன்ற துணைத் தலைவர் சுகுணா ராஜமோகன் உறுப்பினர்கள் விஜயலட்சுமி ராஜேந்திரன், முஸ்தபா, திமுக நகர நிர்வாகிகள் நல்லேந்திரன், இளவரசன், இளங்கோவன், மதியழகன், சாய்,கோவிந்தன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.