கொடுமுடி, ஜூன் 14: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5.57லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. கொடுமுடி, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் 203 நிலக்கடலை மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இது, குறைந்தபட்ச விலையாக ரூ.66.62 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.81.56 காசுக்கும், சராசரி விலையாக ரூ.78.32 காசுக்கும் ஏலம் போனது. இதில், நிலக்கடலை ரூ.5 லட்சத்து 57 ஆயிரத்து 040 விற்பனை நடைபெற்றது. இத்தகவலை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜமுனா தெரிவித்தார்.