மல்லசமுத்திரம், ஜூலை 5:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், 67 மூட்டை கொப்பரையை கொண்டு வந்தனர். கொப்பரையை ஏலம் எடுக்க காங்கயம், சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் தரம் ரூ.191 முதல் ரூ.250.75 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.175 முதல் ரூ.205.60 வரை ஏலம் போனது. ஆகமொத்தம் ரூ.5.32 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்த கொப்பரை ஏலம் வரும் 11ம் தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.5.32 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
0
previous post