ஈரோடு, ஜூன் 11: ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், குப்புசிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2025 26ன் கீழ் ரூ. 1.66 லட்சம் மதிப்பீட்டில் ஆசை நகர் குறுக்கு வீதிக்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி உள்பட ரூ. 21.69 லட்சம் மதிப்பீட்டில் 4 புதிய சாலை பணிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமி நாதன் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முருங்கத்தொழ்வு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2025-26ன் கீழ் ரூ. 12.19 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பாளையம் வேலுசாமி வீடு முதல் கன்னிமார் கோயில் வரை கான்கிரீட் சாலை அமைக்கும் பணி உள்பட மொத்தம் ரூ 84.43 லட்சம் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து, எக்கட்டாம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2025-26ன் கீழ் ரூ. 11.24 லட்சம் மதிப்பீட்டில் சரளைகாடு, குமார் வீடு முதல் குமார் வீட்டின் பின்பகுதி வரை கான்கிரீட் தளம் அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ. 82.29 லட்சம் மதிப்பீட்டில் 12 புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முகாசிபிடாரியூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2025-26ன் கீழ் ரூ. 3.51 லட்சம் மதிப்பீட்டில் முகாசி பிடாரியூர் ஊராட்சி ஜெய்சக்தி நகரில் ஓரடுக்கு கப்பி சாலை அமைத்தல் மற்றும் முகாசி பிடாரியூர் ஊராட்சியில் ரூ.30.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா என மொத்தம் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஒரு முடிவற்ற திட்ட பணியையும் அவர் திறந்து வைத்தார்.
அதேபோல புதுப்பாளையம் ஊராட்சியில் ரூ. 5.42 லட்சம் மதிப்பீட்டில் சென்னிமலை, ஊத்துக்குளி மெயின் ரோடு முதல் பி.கரட்டுப்பாளையம் வரை ஓரடுக்கு கப்பி சாலை அமைத்தல் உள்பட மொத்தம் ரூ. 94.59 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஒரு முடிவற்ற திட்ட பணியையும் அமைச்சர் சாமிநாதன் திறந்துவைத்தார். அதேபோல புஞ்சை பாலத்தொழுவு ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 30.12 லட்சம் மதிப்பீட்டில் சென்னிமலை ஊத்துக்குளி சாலை முதல் வசந்தம் நகர் வரை தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட ரூ. 53.44 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என மொத்தம் ரூ.4.73 கோடி மதிப்பீட்டில் 28 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டியும், 2 முடிவுற்ற பணிகளையும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் ஈரோடு எம்.பி. பிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அர்பித் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.