திருச்செங்கோடு, மே 29: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு, பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 350 மூட்டை எள், 50 மூட்டை பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் கருப்பு எள் கிலோ ரூ.115.10 முதல் ரூ.155.90 வரையிலும், சிவப்பு எள் கிலோ ரூ.101.90 முதல் ரூ.128.90 வரையிலும், வெள்ளை எள் கிலோ ரூ.102 முதல் ரூ.129.40 வரையிலும் விற்பனையானது.
தொடர்ந்து பருத்தி ஏலம் நடந்தது. பிடி ரகம் பருத்தி குவிண்டால் ரூ.6100 முதல் ரூ. 7400 வரை விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த எள் ரூ.30 லட்சத்துக்கும், பருத்தி ரூ.1 லட்சத்திற்குமாக ரூ.31 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.