அரூர், ஜூலை 1: அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை இந்த அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வந்தனர். நடப்பு வாரம் நடந்த ஏலத்தில், 168க்கும் மேற்பட்ட விவசாயிகள், 1050 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். இதில் எம்சி 5 ரக பருத்தி குவிண்டால் ரூ.6,809 முதல் ரூ.7,489க்கு ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ.29 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனதாக, செயலர் அறிவழகன் தெரிவித்தார்.
ரூ.29லட்சத்திற்கு பருத்தி ஏலம்
0
previous post