திருச்செங்கோடு, மே14: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று எள் ஏலம் நடந்தது. விவசாயிகள் 253 மூட்டை எள்ளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் கருப்பு எள் கிலோ ரூ.117 முதல் ரூ.148.10 வரையிலும், சிவப்பு எள் கிலோ ரூ.107.90 முதல் ரூ. 131.90 வரையிலும், வெள்ளை எள் கிலோ ரூ.115 முதல் ரூ.122.50 வரையிலுமாக மொத்தம் ரூ.21.35 லட்சத்துக்கு ஏலம் போனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.21.35 லட்சத்திற்கு எள் விற்பனை
0
previous post