செங்கம், ஜூலை 4: செங்கம் நகரில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் கடந்த மே மாதம் 9ம் தேதி திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து 48ம் நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேன்மொழி, ஆய்வாளர் சத்யா மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அலுவலக பணியாளர்கள் முன்னிலையில் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்திய தொகை ரூ.2.18 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொகையினை கோயில் வங்கி கணக்கில் அதிகாரிகள் டெபாசிட் செய்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.2.18 லட்சம் உண்டியல் காணிக்கை செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில்
0