தர்மபுரி, ஆக.19: தித்தியோப்பனஅள்ளி ஊராட்சி சார்பில், 2024-25ம் ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், ரூ.18 லட்சம் மதிப்பில், மாமரத்துப்பள்ளம் கிராமத்தில் புதிய குளம் வெட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் பென்னாகரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தித்தியோப்பனஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பூமி பூஜை செய்து, புதிய குளம் வெட்டும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் வேட்ராயன், துணை தலைவர் மாதேஷ் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.