மதுரை: மதுரையில் நேற்று ரூ.17.94 கோடி கல்வி கடனை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அளவிலான கல்விக் கடன் வழங்கும் சிறப்பு வழங்கும் முகாம் நேற்று நடந்தது. மதுரை சொக்கிகுளத்தில் உள்ள டோக் பெருமாட்டி கல்லூரியில் நடந்த முகாமை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் 134 பேருக்கு ரூ.17.94 கோடி மதிப்பிலான கல்விக் கடன் காசோலைகளை வழங்கினார். இவ்விழாவில் கலெக்டர் சங்கீதா, எம்.பி சு.வெங்கடேசன், டிஆர்ஓ சக்திவேல், டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் பியுலா ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.