அரூர், ஜூன் 24: அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, புதுப்பட்டி, இருளப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள், பருத்தியை அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வந்தனர்.
இதில் 68 விவசாயிகள், 740 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர். ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ.6,786 முதல் ரூ.7,566வரை ஏலம் போனது. நேற்றைய ஏலத்தில் ரூ.15லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனதாக செயலர் அறிவழகன்
தெரிவித்தார்.