பரமக்குடி, ஜூன் 10: பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல பார்த்திபனூர் ஊராட்சி அழகம்பட்சேரியில், புதிய நாடக மேடை அமைத்து தர வேண்டும் என கிராமத்தினர் எம்எல்ஏ முருகேசனிடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய நாடக மேடை கட்டப்பட்டது.
நேற்று, புதிய நாடக மேடையை எம்எல்ஏ முருகேசன் குத்துவிளக்கு ஏற்றி, அங்குள்ள சிறுவனை அழைத்து நாடக மேடையை திறக்க வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தெளிச்சாத்தநல்லூர் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சேதுபதி, மாவட்ட பிரதிநிதி வேலாயுதம், நயினார் கோவில் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் திலகர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஆதிதாஸ், ஒன்றிய நிர்வாகிகள் பாரதிராஜா, சரவணன், பாலா மற்றும் கிளைக் செயலாளர்கள் பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.