மல்லசமுத்திரம், ஜூன் 7: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 39 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏல்ததை நடத்தினர். இதில் கொப்பரை முதல் தரம் கிலோ ரூ.176.30 முதல் ரூ.209.65 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ரூ.163.50 முதல் ரூ.175.25 வரையிலும் விற்பனையானது.ஒட்டு மொத்தமாக நேற்றைய ஏலத்தில் விவசாயிகள் கொண்டுவந்த 39 மூட்டை கொப்பரை ரூ.1.68 லடசத்துக்கு விற்பனையானது. அடுத்த ஏலம் வரும் 13ம்தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.1.68 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
0