புதுக்கோட்டை, மே 28: ஆபரணத் தங்க நகைகளை அடகு வைப்பது மற்றும் திருப்புதல் தொடப்பாக ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனைகளைக் கண்டித்தும், திரும்பப்பெற வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண் ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாண்டிச்செல்வி தலைமை வகித்தார்.
வங்கிகளில் விவசாயிகள் நகைக்கடன் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள நிபந்தனைகளை கண்டித்து, நடந்த ஆர்ப்பாட்டத்தில் மவாட்டச் செயலாளர் சுசிலா உள்ளிட்டோர் பேசினர்.