ராமேஸ்வரம், ஆக. 26: ராமேஸ்வரம் நகராட்சி 9வது வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் நேற்று புதிய ரேசன்கடை திறக்கப்பட்டது. ராமேஸ்வரம் நகராட்சி 9வது வார்டு பகுதியில் உள்ள சிவகாமி நகர், வெண்மணி நகர், முருங்கைவாடி, ராமர் தீர்த்தம் வடக்கு, துளசி பாவா மடம் தெரு பகுதியில் வாழும் மக்கள் நலன் கருதி சில மாதங்களுக்கு முன்பு புதிய ரேசன்கடை கட்டப்பட்டது. சிவகாமி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட புதிய ரேசன்கடை நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் ரேசன்கடை கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். தொடர்ந்து ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய ரேசன்கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், நகராட்சி தலைவர் நாசர்கான் முன்னிலையில் நடைபெற்றது. இரண்டு நிகழ்ச்சியிலும் நகராட்சி துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி உட்பட நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.