ராமேஸ்வரம், அக்.27: சந்திர கிரகணத்தை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறந்து கிரஹண அபிஷேகம் நடைபெறுகிறது. சந்திர கிரகணம் நாளை (அக்.28) நள்ளிரவு ஒரு மணி முதல் 2.30 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலில் அன்னாபிஷேகம் மற்றும் சாயரட்சை பூஜை முடிந்து இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். பின்னர் நள்ளிரவு 12.50 மணிக்கு மேல் தீர்த்தவாரி சுவாமி அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளி 1.50 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்று வீதியுலா நடைபெறும். அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடைதிறந்து கிரகணாபிஷேகம் நடைபெற்று சுவாமி சன்னதியில் கால பூஜைகள் நடத்தி கோயில் நடை அடைக்கப்பட்டு மீண்டும் அதிகாலை 6 மணிக்கு கோயில் நடை திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.