Sunday, April 21, 2024
Home » ராமேஸ்வரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

by Ranjith

ராமேஸ்வரம், மார்ச் 8: நடுக்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைப்பிடித்து செல்வதும் தொடர்கிறது. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேர் இலங்கை சிறையில் 6 மாத காலத்திற்கும் மேலான தண்டனையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் இருக்கும் மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இன்று வரை பிரதிபலன் எதுவும் இல்லை.

இந்நிலையில் ஏஐடியுசி மீனவர் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு செந்தில்வேல் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தேசிய கவுன்சில் உறுப்பினர் ராமசாமி,

மாநில பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், ஏஐடியுசி மீனவர் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சின்னத்தம்பிசின்னத்தம்பி உள்பட பலர் பேசினர். மீனவர்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியுசி தொழிலாளர் சங்கம் மாவட்ட, நகர் நிர்வாகிகள், தொண்டனர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

19 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi