ராமநாதபுரம், ஆக.23: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் பழனிக்குமார் உள்ளாட்சி தேர்தல் பணிகள், தேர்தல் செலவினங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகளை உரிய காலத்திற்குள் முடித்திடவும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான காலி பணியிடங்களை தேர்தல் மூலம் பூர்த்தி செய்திட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், உதவி ஆட்சியர் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்தோஷம், ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.