Thursday, February 29, 2024
Home » ராமநாதபுரம் அம்மன் கோயில் பகுதியில் ரோட்டோர குளத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் அம்மன் கோயில் பகுதியில் ரோட்டோர குளத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை

by Ranjith

 

ராமநாதபுரம், டிச. 31: ராமநாதபுரம் அருகே தெற்கு தரவை அம்மன் கோயில் கிராமத்தில் பிரதான சாலையோரம் நீர் நிரம்பிய குளம் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் அருகே தெற்குதரவை பஞ்சாயத்தில் உள்ள அம்மன்கோயில் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு அங்கன்வாடி மையம், அரசு பள்ளி, ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி, கோயில்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளது.

இந்த ஊர் வழியாக ராமநாதபுரத்திலிருந்து வண்ணான்குண்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை அமைந்துள்ளது. குறிப்பாக திருப்புல்லானி, சேதுக்கரை, பிரப்பன்வலசை, ராமேஸ்வரம் ஆகிய 4 ஆன்மீக தலங்களுக்கும், தீர்த்த கடல்களுக்கும் செல்லக்கூடிய சாலை சந்திப்பு இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகமாக வந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது. இந்நிலையில் ஊரின் மையப்பகுதியில் செல்லும் இச்சாலையோரத்தில் குளம் ஒன்று உள்ளது.

தற்போது பெய்த மழையால் குளத்தில் தண்ணீர் முழுமையாக நிரம்பி கிடக்கிறது. இந்த சாலை ஒருவழிச்சாலையாக இருப்பதால் இரண்டு வாகனங்கள் விலகி செல்லும் போது குளத்தில் வாகனம் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் குளம் அருகில் சிறுவர்கள் விளையாடி வருகின்றனர், இதனால் குழந்தைகள், முதியோர் குளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே சாலையை மறைத்து குளத்து கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மன்கோயில் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

11 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi