தண்டராம்பட்டு, ஜூன் 27: தண்டராம்பட்டு எடத்தனூர்-திருவடத்தனூர் பகுதியில் ராணுவ தளவாடம் அமைக்க அதிகாரிகள் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த திருவடத்தனூர் எடத்தனூர் பகுதியில் நேற்று காலை 9.40 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் 2 ஹெலிகாப்டர்கள் பறந்தது. எடத்தனூர் கிராமத்தில் 100 அடி உயரத்தில் மூன்று சுற்றுகள் சுற்றி வந்து மேலே சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: எடத்தனூர் திருவடத்தனூர் பகுதியில் ராணுவ தளவாடம் அமைப்பதற்கு உண்டான சாத்தியக்கூறு உள்ளதாக சேட்லைட் மூலம் கண்டறிந்துள்ளனர். இவற்றை டெல்லியில் இருந்து ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 4 ஹெலிகாப்டரில் ராணுவ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அதேபோல் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் காரில் வந்து ஆய்வு செய்தனர். ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து அதிகாரிகள் பார்த்தனர். பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றனர்.