திருச்சி, ஜூன் 6: திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளதாவது, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கொள்ளிடம் பொதுத்தரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து செல்லும் குடிநீர் குழாயில், யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பனி இன்று ஜூன் 6ம் தேதி மேற்கொள்ளப்படவுள்ளதால், மாநகரின் சில பகுதிகளில் நாளை (ஜூன் 7) ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.
பராமரிப்பு பனி காரணமாக மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர் புதியது, சுந்தராஜ நகர் பழையது, ஜே.கே. நகர், செம்பட்டு, E.B காலனி, காஜாமலை பழையது, ரெங்காநகர், சுப்ரமனிய நகர் புதியது, வி.என்.
நகர் புதியது, தென்றல் நகர் புதியது, பழையது, கவிபாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி புதியது, பழையது, அன்பு நகர் பழையது, புதியது, எடமலைப்பட்டிபுதூர் புதியது, பஞ்சப்பூர், அம்மன் நகர், அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகர் புதியது, பழையது, ரயில் நகர் புதியது, பழையது, முன்னாள் ராணுவத்தினர் காலனி புதியது, பழையது, M.K .கோட்டை செக்ஸன் ஆபிஸ், M.K. கோட்டையின் நாகம்மை வீதி, நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பழையது, அம்பேத்கர் நகர், விவேகானந்தர் நகர், LIC புதியது, கே.சாத்தனூர், ஆனந்த நகர், விஸ்வநாதபுரம் மற்றும் சுப்ரமனிய நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் ஜூன் 7ம் தேதியன்று ஒரு நாள் மட்டும் இருக்காது. ஜூன் 8 முதல் வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.