ராஜாக்கமங்கலம், அக். 18 :ராஜாக்கமங்கலம் துறையில் செயல்பட்டு வரும் முழு நேர நியாய விலை கடை கட்டிடம் பழுதடைந்ததையடுத்து புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்த 2018ம் ஆண்டில் அப்போதைய நாகர்கோவில் எம்எல்ஏ சுரேஷ் ராஜனிடம் வேண்டுகோள் வைத்தனர். அதனை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்தார். தற்போது அந்த நியாய விலை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதையடுத்து அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மாநில தணிக்கை குழு உறுப்பினருமான சுரேஷ் ராஜன் கலந்து கொண்டு நியாய விலை கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பங்குத்தந்தை சூசை ஆன்டனி, பங்கு பேரவை துணைத் தலைவர் ராயப்பன், செயலாளர் பிரவீன் வாஸ், பொருளாளர் அகஸ்டின், துணை செயலாளர் டென்சிலின் பாப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் காரவிளை செல்வன், சந்திரன், ஹரிகுமார், முருகன், நாராயண பெருமாள், ரெத்தினசாமி, சுந்தர்ராஜ், பகர்தீன், செல்வன், குளச்சல் ரஹீம், அழிக்கால் ராஜரத்தினம் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.