ராஜபாளையம், நவ.6: பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்கள் ராபி 2024-25 பருவத்தில் நெல் பிர்க்கா அளவில் பயிர் காப்பிட்டுக்கான காலக்கெடு நாள் டிச.16 ஆகும். ஒரு ஏக்கருக்கு ரூ.447 ஆகும். மக்காச்சோளம் வருவாய் கிராம அளவில் பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடு நாள் நவ.30. ஏக்கருக்கு ரூ.316. பாசிப்பயறு, உளுந்து பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடு நாள் நவ.15. ஏக்கருக்கு ரூ.228, துவரை, பருத்தி, நிலக்கடலை, சூரியகாந்தி பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடு டிச.30, பருத்திப்பயிருக்கான பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.441, நிலக்கடலை ரூ.311, சூரியகாந்தி ரூ.187.
குறுவட்டம் அளவிலும் எள் பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடு நாள் நவ.31. பிரிமியர் தொகை ஏக்கருக்கு 120 ரூபாய். சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். பயிர் காப்பீடு பதிவிற்காக விவசாயிகள் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் அடங்கல், வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல். விவசாயிகள் தாங்கள் பகுதியில் உள்ள தேசிய மாயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது பொது சேவை மையங்களின் வாயிலாக பயிர் காப்பீடு கட்டணத்தை உரிய விண்ணப்பத்தில் ஆவணங்களுடன் செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.