ராஜபாளையம், ஜூலை 31: ராஜபாளையத்தில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்க கோப்பை பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் இந்திரன் கிரிக்கெட் கிளப் சார்பாக நான்காம் ஆண்டு விருதுநகர் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 10 ஓவர் கொண்ட போட்டி நாக் அவுட் முறை பின்பற்றப்பட்டு மாதம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வந்தது. 45 கிரிக்கெட் அணிகள் போட்டியில் கலந்துகொண்டன.
முதல் பரிசை ஆக்டிவ் சோலைசேரி அணி 83 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்று பரிசுக்கான தொகை ரூ.9011, வெற்றி கோப்பையும், இரண்டாம் பரிசை தெற்குவெங்காநல்லூர் இந்திரன் அணி 64 புள்ளிகள் பெற்று பரிசுத்தொகை ரூ.6011 மற்றும் வெற்றி கோப்பை பெற்றன. பரிசினை பேராசிரியர் கந்தசாமி வழங்கினார். மூன்றாம் பரிசை தென்மலை 11 ஸ்டார் அணியும், நான்காம் பரிசை மீனாட்சிபுரம் 11 ஸ்டார் அணியும், ஐந்தாம் பரிசை ராஜபாளையம் யங்ஸ்டார் அணியும் தட்டிச் சென்றன.