ராஜபாளையம் நவ.19: தினகரன் செய்தி எதிரொலியாக ராஜபாளையம் நகர் கிழக்கு பகுதியில் சாலையில் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கழிவுநீர் அகற்றப்பட்டது.ராஜபாளையம் நகர் கிழக்கு பகுதியில் பிஎஸ்கே நகர் பஸ் நிறுத்தம் அருகே ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்ற போது சாலையின் குறுக்கே சென்று கொண்டிருந்த மழைநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது. ரயில்வே மேம்பாலம் பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வந்த நிலையில் குழாய் அடைப்பால் சாலையில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி வந்தது.
இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருந்து வருவதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக உடனடியாக சாலையின் குறுக்கே செல்லக்கூடிய கழிவுநீர் குழாய் அடைப்பினை நெடுஞ்சாலை துறை சார்பில் நீக்கினர். இதனால் பல மாதங்களாக தேங்கி இருந்த மழைநீர் மற்றும் கழிவு நீர் அகற்றப்பட்டு சரி செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.