ராஜபாளையம், ஆக.5: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் கண்மாய், காற்றின் வேகத்தால் அலைகள் ஏற்பட்டு கடல் போல் காட்சி அளிக்கிறது. ராஜபாளையம் மேற்கு மலை தொடர்ச்சியில், கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர் மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பின. இதன் மூலம் விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து பயனடைந்தனர்.
தற்போது தென்மேற்கு பருவக்காற்று அதிகளவு வீசிவரும் நிலையில், வெங்காநல்லூர் கண்மாய், தேங்கியுள்ள தண்ணீரில் அலைகள் ஏற்பட்டு கடல்போல் காட்சியளிக்கிறது, மேலும், இப்பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சாரல் மழை பெய்து குளிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.