ராஜபாளையம், செப்.2: ராஜபாளையம் அருகே உள்ள மொட்டை மலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது. இதில் விருதுநகர், நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, குமரி, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து 25 பள்ளிகளில் பயிலும் 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 9, 11, 13, 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோர் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சித்தாசனம், பர்வத ஆசனம், உட்கட்டாசனம், நின்ற பாதாசனம், திரிகோணாசனம், புஜங்காசனம், மகா முத்ரா, பவள முத்தாசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்து காட்டினர். இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.